ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி விதிப்பில் தப்பிப்பதற்காக சில உற்பத்தி ஆலைகளை அமெரிக்காவிற்கு வெளியே நிறுவும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முடிவை அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து நிறுவனங்களுக்கும் முன்னதாக ஹார்லி டேவிட்சன் வெள்ளைக் கொடி ஏந்தி இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹார்லி டேவிட்சனுக்காக கடுமையாக தாம் போராடி வரும் வேளையில், சில ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றுவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்து இருப்பது தங்களை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.