இன்று முதல் சென்னையில், ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு

‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு (2017) ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்குகிறார். இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விஸ்வாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக ஹைதராபாத்தில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை இன்று முதல் சென்னையில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.