சேகர் ரெட்டி மீதான எப்ஐஆர்.,கள் ரத்து

கடந்த 2016 ம் ஆண்டு சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 34 கோடி ரூபாய் அளவிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ய முயன்றதாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டது. மேலும் புதிய 2 ஆயிரம் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை எதிர்த்து சேகர் ரெட்டி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீதான 2 மற்றும் 3வது வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.