இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றம் ஏற்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 100 க்கு மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனையை தருகிறது. இது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சம்பவம் பெரிய செய்தியான பின்னரும் கூட எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது அதைவிட வேதனை. தமிழக அரசு இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் – விஷால்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories