ஆண் குழந்தை வேண்டுமென்றால் எனது தோட்ட மாம்பங்களை சாப்பிடுங்கள்: நாசிக் பொதுக்கூட்டத்தில் இந்துஸ்தான் தலைவர் சர்ச்சை பேச்சு

மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் அவரது தலைநகராக ராய்காட் நகரம் இருந்தது. இந்த நிலையில், சிவாஜியின் அரியாசனம் இந்நகரில் மீண்டும் இடம் பெறுவதற்காக, இந்த மாத தொடக்கத்தில் பிதே பொது பேரணி ஒன்றை நடத்தினார். இதில் பேசிய சிவ பிரதீஷ்தான் இந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் சாம்பாஜி பிதே, எனது தோட்டங்களில் சில மாமரங்களை நான் வளர்த்து வருகிறேன். இதுவரை குழந்தை இல்லாத 180 தம்பதியினர் என்னிடம் இருந்து இந்த பழங்களை பெற்று சென்றுள்ளனர். அவர்களில் 150 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது என கூறினார். மேலும், ஒரு தம்பதி, தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென விரும்பினால் அவர்கள் இந்த மாம்பழங்களை உண்ட பின்னர் அவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கும். இந்த மாம்பழம் மலட்டு தன்மை உள்ளவர்களுக்கு மிக பயன் தரும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ஒருவர் சுகாதார துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து நாசிக் மாநகராட்சி பிதேவுக்கு கடந்த வாரம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...