அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விளக்கம்

20 மாவட்டங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இதுதொடர்பாக திமுக உறுப்பினர் பொன்முடி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது 20 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படுவதால் அந்தப் பகுதி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதற்கு விளக்கம் அளித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 20 மாவட்டங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.