தமிழக முதல்வர் இன்று சேலம் வருகை

முதல்வர் பழனிசாமி, இன்று, சேலம் வருகிறார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, விமானம் மூலம், நாளை காலை, முதல்வர் பழனிசாமி, காமலாபுரம் வருகிறார். அங்கிருந்து, ஓமலூர் கட்சி அலுவலகம் சென்று, நிர்வாகிகளை சந்திக்கிறார். தொடர்ந்து, கருப்பூரில் புறக்காவல் நிலையத்தை திறந்துவைக்கிறார்.

தாரமங்கலம் செல்லும் முதல்வர், கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இடைப்பாடியில், சுற்றுவட்ட சாலை, அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைக்கிறார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில், மக்களிடம் குறைகேட்கும் அவர், மாலை, சேலத்தில், நான்கு இடங்களில், கட்சி நிர்வாகிகளின் இல்லத் திருமண வரவேற்பு விழாக்களில் பங்கேற்கிறார்.

இன்று இரவு, சேலம், நெடுஞ்சாலை நகரில் தங்கும் முதல்வர், நாளை கிருஷ்ணகிரி செல்கிறார். முதல்வரின் வருகையை ஒட்டி, சேலம் மாவட்டத்தில், 500, மாநகரில், 300க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். * ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 18 கிராமங்கள், சூரமங்கலம் ஸ்டேஷனுடன் இணைக்கப்பட்டது. இதனால், அந்த ஸ்டேஷன் எல்லை அதிகரித்து, கருப்பூரில், புறக்காவல் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே, தனியார் கட்டடத்தில், அந்த ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு, டவுன் எஸ்.ஐ., அங்கப்பன் தலைமையில், எஸ்.எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணன், ரவிக்குமார், ஏட்டுகள், போலீஸ் என, 10 பேரை நியமித்து, நேற்று, கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள், இன்று முதல், ஸ்டேஷனில் பணியை தொடர்வர்.