மருத்துவ மணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகின. அதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் ஜுன் 11 முதல் 18 வரை நடைபெற்றது.
இதனிடையே, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஓதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு இன்று முதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது