தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு இன்று முதல் தினமும் விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை இன்று முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

தூத்துக்குடியின் வாகைக்குளம் பகுதியில் விமானப் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. தொழில் நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.15 மணிக்கு பெங்களூரு போய் சேரும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.