மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான கருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் ஜூலை 20-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சந்தையூர் கிராமம். இங்கு இருபிரிவை சேர்ந்த சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் சுவர் எழுப்பினர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால் தீண்டாமை சுவர் அகற்றப்படவில்லை. இந்த சுவற்றை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.