உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சுவிடன் – சுவிட்சர்லாந்து அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கொலம்பியா – இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.

சுவிடன் – சுவிட்சர்லாந்து அணிகள் இடையேயான போட்டியில் சுவிடன் வெற்றி பெற 31 சதவிகிதம் வாய்ப்பும், சுவிட்சர்லாந்து வெற்றி பெற 35 சதவிகித வாய்ப்பும் உள்ளது. போட்டி டையில் முடிய 34 சதவிகித வாய்ப்பு உள்ளது.

கொலம்பியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் கொலம்பியா வெற்றி பெற 24 சதவிகித வாய்ப்பும், இங்கிலாந்து அணி வெற்றி பெற 45 சதவிகித வாய்ப்பும் உள்ளது போட்டி டையில் முடிய 31 சதவிகித வாய்ப்பு உள்ளது.