பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இன்று கடைசித் தேதியாகும்.
தமிழகத்தில் உள்ள 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள 1, 753 பி.எட். இடங் களில் 2018- – 2019-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற் றைச் சாளர கலந்தாய்வை சென் னையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த மாதம் தொடங்கியது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2018- – 2019, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காம ராஜர் சாலை, திருவல்லிக் கேணி, சென்னை- 5’’ என்ற முகவரிக்கு இன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.