சென்னை-விழுப்புரம் பிரிவு பொறியியல் பணி: இன்று ரயில் சேவையில் மாற்றம்

சென்னை-விழுப்புரம் பிரிவில், ஒட்டிவாக்கத்துக்கும் கருங்குழிக்கும் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுகின்றன.

மேல்மருவத்தூர்-விழுப்புரத்துக்கு முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், விழுப்புரம்-மேல்மருவத்தூருக்கு மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை எழும்பூர்-புதுச்சேரிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர்-விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

புதுச்சேரி-திருப்பதிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் புதுச்சேரி-விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மட்டும் இயக்கப்படும்.

சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஒட்டிவாக்கத்தில் 2 மணி நேரம் மற்றும் 5 நிமிடம் நின்று செல்லும். சென்னை எழும்பூர்-திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் விரைவு ரயில் செங்கல்பட்டில் 2 மணி நேரம் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர்-புதுச்சேரிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் செங்கல்பட்டில் மூன்றரை மணி நேரம் நின்று செல்லும்.

திருப்பதி-புதுச்சேரிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் செங்கல்பட்டில் ஒன்றரை மணி நேரம் நின்று செல்லும்.

சென்னை கடற்கரை-மேல்மருவத்தூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் சிங்கப்பெருமாள் கோயிலில் சிறிது நேரம் நின்று செல்லும். இந்த மாற்றங்கள் இன்று மட்டும் செயல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.