தட்கலில் விண்ணப்பித்து விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெறலாம் : அமைச்சர் தங்கமணி

தட்கல் முறையில் விண்ணப்பித்து இந்த மாதத்திற்குள் விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெறலாம் என பேரவையில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், சேலம் மாநகராட்சி முன் வந்தால் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.