வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், கோச்சடையான் பட விவகாரத்தில் நிலுவை தொகையை எப்போது திருப்பி தருவீர்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 10ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவது குறித்து பதிலளிக்காவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறியுள்ளது.
கோச்சடையான் படம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இந்த படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.