இன்று தேமுதிக செயற்குழுக் கூட்டம்

தேமுதிக தலைமை செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று கூட உள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகித்து, கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசித்து சிறப்புரை வழங்க உள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.