இன்று விசாரணைக்கு வருகிறது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணாவை பரிந்துரை செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருமாறுபட்ட தீர்ப்பு வழங்கியத் தொடர்ந்து, வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 18 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி அதிமுகவின் 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். ஆனால், 18 எம்எல்ஏக்களையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கியது. சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியது செல்லும் என்று அவர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

இதனால் வழக்கில் 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டு, 3-வது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சத்தியநாராயணாவை பரிந்துரை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை விசாரித்துத் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.