ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், 76 பந்துகளில் 172 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இன்று ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 229 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், வெறும் 76 பந்துகளில் 172 ரன்கள் விளாசினார்.
சர்வதேச 20 ஓவர் போட்டி ஒன்றில் அதிக ரன் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஃபிஞ்ச் படைத்துள்ளார். இதுமட்டும் அல்லாமல், ஆரோன் ஃபிஞ்சும், டி ஆர்கி ஷார்ட்டும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்ததன் மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டியில் பார்ட்னர்ஷிப்பில் 200 ரன்களைக் கடந்தவர்கள் என்ற பெருமையையும் பெற்றனர்.