ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது:அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது என்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்ட மன்றம் ஆகிய 2 தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும் என்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டுதான் ஆளுநர் செயல்படுகிறார் என்றும் ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது; வறட்சியைதான் தர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.