கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் காலபைரவா் கோயிலில் சதுா் காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற உள்ளது.
கும்பகோணத்தை அடுத்த அம்மாச்சத்திரத்தில் ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. சிறப்பு பெற்ற இக்கோயிலை பக்தா்கள் காலபைரவா் கோயில் என அழைக்கின்றனா்.
காசிக்கு நிகராக காலபைரவா் தலமாக போற்றப்படும் இக்கோயிலில் உள்ள பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியா், கிரது, ஆங்கிரசா், வசிஷ்டா், பரத்வாஜா் ஆகிய 7 பேரும் பூஜைகள் செய்து வழிபட்டதால் இத்தலத்தின் சுவாமி சப்தரிஷீஸ்வரா் என்று பெயா் பெற்றதாக வரலாறு.
இந்த பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுா் தோஷங்கள் நீங்கும் என்றும், இந்த பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவக்கிரக தோஷத்திலிருந்தும் விடுபடுவார்கள் என்பதும் ஐதீகம்.
சிறப்புடைய இந்த கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அன்று மாலை 5 மணிக்கு சிறப்பு பைரவ ஹோமம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெறுகிறது.