திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவம் இன்று தொடங்குகிறது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆனி பிரம்மோத்ஸவமும் ஒன்று. நிகழாண்டுக்கான ஆனி பிரம்மோத்ஸவம் இன்று காலையில் ஸ்ரீவிநாயகர் உத்ஸவத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து, நாளை காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் ஆனி பிரம்மோத்ஸவத்துக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து வரும் 16 -ஆம் தேதி வரை தினமும் காலை, இரவு வேளைகளில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெறுகின்றன.