சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதால் சேப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடப்பதால் முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.