8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை தெரிவித்து நிலத்தை அளவீடுசெய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசும் தீவிரம் காட்டி வருகிறது என்பது குரிப்ப்பிடத்தக்கது.