சென்னை – சேலம் 8- வழி சாலைக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம்

8- வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டத்தை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அரசு ஆணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது போலீசார்க்கும் போராட்டகாரர்களுக்கும் தள்ளு முள்ளு இதனை தொடர்ந்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்