சிகிச்சைக்காக விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று வந்தார். ஆனாலும் அவருடைய உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வேகமாக நடக்க முடியாமலும், தெளிவாக நீண்ட நேரம் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் செல்கிறார். அமெரிக்காவில் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறும் விஜயகாந்த், ஆகஸ்ட் மாதம் தனது பிறந்த நாளான 25- ஆம் தேதிக்கு முன்பாக தமிழகம் திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.