டி-20’யில் ரோகித் சர்மா 2,000 ரன்களை கடந்தார்

சர்வதேச டிவென்டி-20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 2 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி-20 போட்டியில், 14 ரன்களை எடுத்த போது டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக விராத் கோஹ்லி இச்சானையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப்போட்டியில், ரோகித் சர்மா 56 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உதவியுடன் சதம் விளாசினார்.