போலி இணையதளம் உருவாக்கி மோசடி செய்த கேரள இளைஞர் கைது

சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் போல போலியாக உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீஜித் என்ற அந்த இளைஞரை, கேரளாவில் கைது செய்து சென்னைக்கு அழைத்த வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். போலியாக மெட்ரோ ரயில் இணையதளத்தை உருவாக்கியதன் பின்னணியில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.