முன்னாள் மத்திய அமைச்சர் நடந்த திருட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ்

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடுபோனதாகச் சென்னை ஆயிரம்விளக்கு போலீஸில் கடந்த 8-ம்தேதி காலை புகார் செய்யப்பட்டது. அன்று மாலையே போலீஸில் கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில், நகை-பணம் திருடு போனதா… இல்லையா என்ற கேள்விக்கு போலீஸ் தரப்பிலும் பதில் இல்லை; சிதம்பரம் தரப்பிலும் தகவல் இல்லை. “இருதரப்பும் பேசி முடித்துக்கொண்டதாகத் தெரிவித்ததால், இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவைக்கிறோம்” என்ற ரீதியில் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.

ப.சிதம்பரம் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு எப்போதுமே இருந்து வருகிறது. கடந்த அக்டோபர், 2016-ல், ராஜகோபாலன் சுப்பராமன் என்ற பெயரில், “ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதுதான் சிறந்த வழி” என்று ட்விட்டரில் வந்த கொலை மிரட்டலால் அந்தப் பாதுகாப்பு இன்னும் அதிகமானது. வீட்டில் திருடுபோனதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.