தாய்லாந்து குகை சிக்கியவர்களை மீட்ட களமிறங்கிய மீட்புப்பணி வீரர்கள்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும், கால்பந்து பயிற்சியாளர் ஆகியோரில் நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள் கிழமையும் மீட்கப்பட்டனர். மீதமுள்ள ஐவரை மீட்கும் பணி இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 10.08க்கு தொடங்கியது.

19 முக்குளிக்கும் வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர். நிலைமை சாதகமாக இருந்தால், மீதமுள்ள நான்கு சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர், அவர்களோடு தற்போது உள்ள ஒரு டாக்டர், கடற்படை முக்குளிக்கும் வீரர்கள் உள்ளிட்ட 9 பேர் இன்றே வெளியில் வருவார்கள்.

இன்றைய மீட்புப் பணி முந்தைய நாளைவிட நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்றும், ஆனால், இன்றே மீட்புப் பணி மொத்தமும் நிறைவடையும் என்று நம்புவதாகவும் கடற்படை சீல்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.