- Ads -
Home சற்றுமுன் 3-வது சீசன் டிஎன்பிஎல் போட்டி: இன்று தொடக்கம்

3-வது சீசன் டிஎன்பிஎல் போட்டி: இன்று தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 3-வது சீசன் போட்டிகள் இன்று முதல் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் போட்டித் தொடர் போன்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாரிபில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 போட்டியாக தொடகங்கப்பட்ட இந்த தொடர் தமிழ்க மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

திருநெல்வேலியில் நடைபெறும் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கின்றன.32 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 ஆட்டங்கள் சென்னையில் நடைபெற உள்ளன.

இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன. இந்த சீசனில் முதல்முறையாக பிற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இருவர் ஒவ்வொரு அணியிலும் விளையாட உள்ளனர். இன்று தொடங்கும் இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

ALSO READ:  ‘நீட்’ நாடகம்: இனியாவது மாணவர்களை நிம்மதியா படிக்க விடுங்க முதல் அமைச்சரே!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version