தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய டி.என்.பி.எல் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் திருநெல்வேலியில் இன்று தொடங்குகிறது.
டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.
நெல்லையில் இன்று மாலை தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும் இத்தொடரின் முதல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
2016ஆம் ஆண்டில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் 2017ஆம் ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. – ஆம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டி திருநெல்வேலி, சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.