ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா- இங்கிலாந்து அணி இன்று மோதல்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நாட்டிங் காமில் நடக்கிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 97-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 96 ஆட்டத்தில் இந்தியா-52-ல், இங்கிலாந்து-39-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்து இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.