மக்கள் நீதி மய்யம்: இன்று மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்களை அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிக்க உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கமல்ஹாசன் தொடங்கினார். அந்தக் கட்சியின் உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலாளர்கள், இதர நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து கட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் கமல் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று மாவட்டச் செயலாளர்களின் முதல் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட உள்ளார்.