பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி விழா இன்று தொடக்கம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடத்தப்படும். இதேபோல, நிகழாண்டு இவ்விழா இன்று தொடங்கப்படவுள்ளது.

இதில், மஹா வாராஹி அம்மனுக்கு தொடக்க நாளில் இனிப்பு அலங்காரம், நாளை மஞ்சள் அலங்காரம், 14-ம் தேதி குங்கும அலங்காரம், 15-ம் தேதி சந்தன அலங்காரம், 16-ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரம், 17-ம் தேதி மாதுளை அலங்காரம், 18-ம் தேதி நவதானிய அலங்காரம், 19-ம் தேதி வெண்ணெய் அலங்காரம், 20-ம் தேதி கனி வகை அலங்காரம், 21-ம் தேதி காய்கறி அலங்காரம், 22-ம் தேதி புஷ்ப அலங்காரம், அம்மன் வீதி உலா ஆகியவையும், விழாக்காலங்களில் மாலையில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.