திருச்சி : ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மரணம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50 வது ஜீயரான, ஸ்ரீரங்க நாராயண ஜீயர், உயிரிழந்ததார். அவருக்கு வயது 89. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக, திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சுமார் 3 மணியளவில் அவர் மரணமடைந்தார். ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் உள்ள ஜீயர் மடத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பிருந்தாவன பிரவேசம் எனப்படும் அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் நடைபெறுகிறது.