5 மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் பதிவு: பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த பதிவுத்துறையில், ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான இந்த புதிய மென்பொருளில் இருந்த குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13ந் தேதி தொடங்கி நேற்று வரை 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக சார்பதிவாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் கடுமையாக உழைத்ததாக பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்