திருச்சியில் இன்று உலகப் பணத்தாள் கண்காட்சி

மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இன்று தொடங்கி தொடர்ந்து 3 நாள்களுக்கு உலகப் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் பி. விஜயகுமார் கூறுகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள் வரலாற்றை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில், திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலகப் பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள், அஞ்சல் தலைகள் கண்காட்சியை நடத்தவுள்ளது.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசா ஹாலில் நடைபெறும் கண்காட்சியில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் காலத்து நாணயங்கள், அர்ஜென்டினா, அர்மேனியா, ஆஸ்டிரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 200 உலக நாடுகளின் பணத்தாள்கள், நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்படும்.

மேலும், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட அணா, பைஸ், காலணா, ஓட்டை ஒரு பைசா, அரையனா உள்ளிட்ட மதிப்பிலான செம்பு, வெள்ளி, பித்தளை, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் வட்டம், சதுரம், அறுகோண வடிவ நாணயங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகர், பொருளர் அப்துல்அஜீஸ் உள்ளிட்டோர் செய்துள்ளனர். மேலும், விவரங்களுக்கு, 98424 12247 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.