அய்யா வைகுண்டர் கோவிலில் ஆனித் திருவிழா இன்று தொடங்குகிறது

கோவை அடுத்த ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் பூமனவைப்பதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று ஆனித்திருவிழா தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறப்பு, 8 மணிக்கு அய்யா தர்மத்திற்கு செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படு கிறது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல், 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து 14-ந்தேதி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அருள்வாக்கு, மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு நடக்கிறது.

15-ந்தேதி காலை உகப்படிப்பு, 6.30 மணிக்கு தொட்டில் வாகனத்தில் அய்யா பவனி வருதல், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அருள்வாக்கு, மாலை 7 மணிக்கு உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகம், முளைப்பாரி எடுத்து சூரிய வாகனத்தில் ஈச்சனாரி விநாயகர் கோவில் வரை அய்யா பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பின்னர் 16-ந்தேதி காலை 4 மணிக்கு குடும்பப்பால் வைத்து நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. ஆனித்திருவிழாவை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...