கரூரில் இன்று புத்தக கண்காட்சி துவக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட மைய நூலகம் சார்பில், கரூர் பிரேம் மஹாலில், புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கண்காட்சியை துவக்கி வைக்கிறார். வரும், 23 வரை நடக்கவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் தினமும், கருத்தரங்கம், பட்டிமன்றம், கோளரங்கம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து, கண்காட்சி ஏற்பாட்டாளர் தங்கராசு கூறுகையில், ”கடந்த ஆண்டு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், புத்தகங்கள் விற்பனையாகின. நடப்பாண்டு, 71 புத்தக ஸ்டால்கள் இடம் பெற உள்ளதால், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், புத்தகங்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது,” என்றார்.