தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக அமித்ஷா கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு இடம் கிடையாது என்றும் கூறியுள்ளார்.