சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்து வரும் பாலியல் புகார் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குனர்களும் நடிகர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இயக்குனர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், சினிமா துறையில் நல்லவர்களும் உள்ளனர், மோசமானவர்கள் சிலரும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை . அந்தப் புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றவிட்டனர் என்று நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒவ்வொருநாளும் தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் வெளிப்படுத்தி வருகிறார்.