அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இன்று ஃபின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் நடக்கவுள்ள அந்த சந்திப்பில், ‘பல தேசிய பாதுகாப்பு விவகாரங்கள்’ குறித்து விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதிபர் புதின் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேடோ பேச்சுவார்த்தைக்கு பிறகு புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் சிரியாவின் போர் குறித்தும் யுக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, வியட்நாமில் நவம்பர் மாதம் ஆசிய பசிஃபிக் சம்மேளனம் நடைபெற்றபோது டிரம்ப் புதின் சந்திப்பு நடைபெற்றது.