பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான விளங்குவது பெரியநாயகியம்மன் கோயில். ஆதி திருஆவினன்குடி கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா இன்று தொடங்குகிறது.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், மீனாட்சி அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும். கடைசி வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆடி லட்சார்ச்சனை வேள்வி மற்றும் தங்கக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு மகாஅபிஷேகம் மற்றும் பெரியநாயகியம்மன் வெள்ளித்தேரில் ரதவீதி உலா எழுந்தருளல் ஆகியவை நடைபெற உள்ளது.