கோவை மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த திருக்கோயிலாக வன பத்ரகாளியம்மன் திருக்கோயில் விளங்குகின்றது. ஒவ்வொரு ஆண்டும் குண்டம் இறங்கும் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா இன்று பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
20-ம் தேதி லட்சார்ச்சனையும், 21-ம் தேதி கிராமசாந்தியும், 22-ம் தேதி கொயேற்றமும், அன்று மாலை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகின்றன.
பொங்கல் வைத்து குண்டம் திறத்தம் 23-ம் தேதியும், 24-ம் தேதி அம்மன் அழைப்பு மற்றும் அன்று மாலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
26-ம் தேதி பரிவேட்டையும், 27-ம் தேதி மகா அபிஷேகமும், 3-ம் தேதி 108 திருவிளக்கு பூஜையும், 31-ம் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.