இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.
20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. 20 ஓவர் தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரையாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் இங்கிலாந்து இருக்கிறது.
இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஏமாற்றம் காணப்பட்டது. தொடக்க ஜோடியான ரோகித் சர்மா-தவானின் ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும். இதில் தவான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதேபோல ராகுலும் அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
இங்கிலாந்து தொடரில் தினேஷ் கார்த்திக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்றைய ஆட்டத்திலாவது கேப்டன் கோலி வாய்ப்பு வழங்குவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.