காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் பரூக் அப்துல்லா மீது குற்றபத்திரிகை தாக்கல்

காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா இருந்த போது, ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் வளர்ச்சிக்காக 112 கோடி ரூபாய் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது. இந்த நிதியில் முறைகேடு செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த சி.பி.ஐ, ஸ்ரீநகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.