அனைத்து குழந்தைகள் காப்பகங்களையும் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா 50 ஆயிரம் ரூபாக்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் இணைந்து விற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கன்னியாஸ்திரி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். குழந்தைகள் விற்பனை செய்ததை கன்னியாஸ்திரியும் ஒப்பு கொண்டுள்ளார். இந்நிலையில், மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சர் மேனகா பிறப்பித்துள்ள உத்தரவில், “அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா?” என்றும், குழந்தைகள் தத்தெடுப்பு பராமரிப்பு மத்திய அமைப்பில் இணைக்கப்பட்டுளளதா? என்பதை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.