காவேரி மருத்துவமையில் கருணாநிதி: அறிக்கை வெளியிட்ட நிர்வாகம்!

DMK Leader Karunanidhi (File Photo)
DMK Leader Karunanidhi (File Photo)

சென்னை : மருத்துவப் பரிசோதனைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு கருணாநிதிக்கு ட்ரக்யாஸ்டமி கருவி அகற்றப்பட்டு 4வது முறையாக புதிய கருவி பொருத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.

இதனிடையே, கருணாநிதி உடல் நிலை குறித்து தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் கருணாநிதி உடல் நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இன்று ட்ரக்யாஸ்டமி கருவி அகற்றப்பட்டு மாற்றுக் கருவி பொருத்தப் பட்டு இன்றே அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக மூச்சுவிட சிரமப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, 2016ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டிசம்பர் 23ம் தேதி கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவ்வப்போது, மருத்துவமனைக்கு சென்று டிரகியாஸ்டமி கருவியை மாற்றி வருகிறார். அதேபோல இன்றும் கருணாநிதி காவிரி மருத்துவமனை செல்கிறார். இன்று அவருக்கு 4வது முறையாக டிரகியாஸ்டமி கருவி மாற்றப்படுகிறது.

டிஸ்சார்ஜ் செய்தபோது, 2 வாரங்களுக்கு மட்டுமே இந்த கருவி தேவைப்படும் என மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை அந்த கருவியை முழுமையாக அகற்ற முடியவில்லை. இதனால்தான், கருணாநிதியால் பொது இடங்களில், பேச முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொண்டையின் நடுபகுதியில் பெரிய துளையிட்டு, அதற்குள் டியூப்பை நுழைத்து, டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் சிகிச்சை நடைமுறை டிரகியாஸ்டமி என்று அழைக்கப்படுகிறது.

தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால் இதுபோன்ற செயற்கை முறையிலான சுவாசம் அவசியப்படுகிறது. நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும், டிரகியாஸ்டமி சிகிச்சை கொடுக்கப்படுகிறது.கழுத்தில் இணைப்பு குழாய்தொண்டையில் ஓட்டை போட்டு டியூபை பெருத்திய ‘பிறகு அந்த பகுதியை சுற்றிலும் தையல் போடப்படும். தொண்டையில் பொருத்படும்..

?