அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சேலம் சென்னை 8 வழிச்சாலைக்கு 85 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம்எடுத்த நிறுவனம் வரி செலுத்தாவிடில் வருமானவரி சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்று தான்.
தமிழக அரசின் டெண்டரில் முறைகேடு இல்லை
சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான்ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. சோதனைக்குள்ளான நிறுவனம் தி.மு.க., ஆட்சியிலேயே ஒப்பந்தம் எடுத்துள்ளது .தி.மு.க ஆட்சியில் ஒருவருக்கே 8 டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது கடந்த தி.மு.க ஆட்சியில் 15 சதவீதம் அதிகப்படுத்தி டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பெய்து அணைகள் நிரம்பின. ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் மழை நின்று விட்டது.சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடுமையான தண்டனை பெற்று தரப்படும்.
சத்துணவு முட்டைக்கு மாநில அளவில் டெண்டர் முறையை அறிமுகப்படுத்தியது தி.மு.க., தான். ஒவ்வொரு மாதமும் டெண்டர் என்ற முறையை மாற்றியது அ.தி.மு.க தான்.முட்டை டெண்டர் முறையில் அரசின் நடைமுறை சரிதான் என உச்சநீதிமன்றம் தெரிவத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முட்டை டெண்டர் என்பது இயலாத காரியம் என நீதிமன்றம் கூறிஉள்ளது.
5 ஆண்டுகளில்ரூ. 2,031 கோடிக்கு மட்டுமே முட்டை கொள்முதல் நடைபெற்றுள்ளது. ரூ.2031 கோடி கொள்முதலில் 5 ஆயிரம் கோடி ஊழல் எப்படி நடக்கும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுதான் முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது. உக்கடம் ஆற்றுப் பாலப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார்.