
புதுச்சேரியில் 3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜூலை 19-ம் தேதியான இன்றுக்கு ஒத்தி வைத்தனர். இன்றைய விசாரணையின் போது 3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு அல்லாமல், நியமன உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு செல்ல உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதியும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.